பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


14. தலையாலங் கானத்துச்

செருவென்ற நெடுஞ்செழியன்

நெடுஞ்செழியன் என்பது பாண்டியர்குலத்துப் பார்த்திபர் பலர்க்கும் பெயராக அமைந்துள்ளது. நெடுஞ்செழியன் என்ற பெயரைத் தாங்கி அறிவு சான்று கவிபாடும் காவலராகத் திகழ்ந்த வர் இருவர். ஆனால், அவ்விருவரும் வேறு வேறு ஆவர் என்பதை விளக்க நம் முன்னோர் அவர்கட்கு முன்பு சில சொற்களை அடைமொழியாக அமைத்துக் குறிப்பிட்டு வந்தனர். அவர்களுள் ஒருவர் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன். மற்றவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பவர். இவரது பெயர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியர் எனவும் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற செழியன் எனவும் நெடுஞ்செழியன் எனவும் வழங்கப் பெறும். ஈண்டுப் பின்னவர் வரலாற்றைச் சிறிது பார்ப்போமாக.

இவ்வரசர் பெருமான் பாண்டிய மரபினர் என்பது இவர்க்கு முன்னும் பின்னும் அமைந்த சொற்களே விளக்கி நிற்கின்றன. இவர் பல புலவர்களால் பாடப்பட்ட பெருமை சான்றவர். இவரைக் கல்லாடனார், மாங்குடி கிழார், இடைக்குன்றூர் கிழார், மாங்குடி மருதனார், நக்கீரனார் என்பவர்கள் சிறப்பித்துப்