பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

பாடியுள்ளார். புலவர்கள் பலரால் பாடப்பட்ட புரவலர் இவர் எனில், இவரது பெருமை சொல்லாமலே புலப்படுவதாகும்.

இவர் தம் இளமைப் பருவத்தில் தலையாலங்கானத்தில் கோச்சேரமான் யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையோடு போர் புரிந்து, அவனைச் சிறைப்படுத்தியவர். இக் காரணம் பற்றியே தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்புப் பெயர் பெற்றனர், இம் மன்னனை வென்றதோடு அல்லாமல், சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான்; பொருநன் என் பாரையம் வென்றவர். வேள் எவ்வியின் மிழலைக்கூற்றத்தையும் கைக்கொண்டவர். மறக் கள வேள்வி, அறக்கள வேள்விகளைச் செய்தவர். மறக்கள வேள்வியாவது, பேய் மகள் வயிறார உண்ணும்படி வீரன் களவேள்வி செய்தல் ; அறக்கள வேள்வியாவது யாகாதி காரி யங்கள் புரிதல். புலவர்களிடத்துப் போர் அன்பு கொண்ட உத்தம குணத்தர் இம் மன்னர். இத்தகைய மன்னர்பிரானைக் குடபுல் வியனார் பாடும்போது, இம் மன்னரது முன்னோர் அகன்ற உலகைத் தம் முயற்சியால் கொண்ட புகழுடையவர் என்றும் இயமனும் இரங்கத்தக்க நிலையில் போர்க்களத்தில் இரு பெரு வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் வென்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.