பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கலம் ஈந்தவர் என்றும், பாணனுக்குப் பொன் தாமரையும் வெள்ளி நாரும் கொடுத்தவர் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஆகவே, இவர் வீர நெஞ்சினர் ஆயினும், கூடவே ஈர நெஞ்சும் உடையவர். இத்தகைய வீரமன்னர் அரசப் பொறுப்பினை ஏற்று நடத்தியதோடு இன்றி, அவ்வப்போது அருங்கவிபாடி அகம் மகிழ்பவராகவும் காணப்பட்டார். அப்படிப் பாடும் பாவில் பாலை நிலத்தின் இயல்பினை நன்கு பாடிய காரணத்தால் பாலை பாடிய பெருங் கடுங்கோ என்று அடை மொழியும் பெற்ற புலவராயினர்.

இவர் பாடியுள்ளனவாகப் புறநானூற்றில் ஒன்றும், குறுந்தொகையில் பத்துச் செய்யுட்களும், நற்றிணையில் பத்துப் பாடல்களும், அகநானூற்றில் பதினென்றும், கலித்தொகையில் முப்பத்தைந்தும் ஆக அறுபத்தேழு செய்யுட்கள் காணப்படுகின்றன. இவ்வாறு பாடல்கள் பல பாடியுள்ள நிலையினைக் கருதும் போது, இவர் பெரும் புலவர் என்பதனைக். கூறவும் வேண்டுமா? வேண்டா அன்றே! புறநானூற்றில் இவர் வீரன் ஒருவனைப் பற்றிப் பாடி அவ்வீரனது மேம்பாட்டினைப் புகழ்ந்து சிறப்பித்துள்ளார். அவ்வீரன் பகைவர்கள் முன்பு எதிர்த்து நின்று, பகைவர் எய்யும் படைகளைத் தன் உடம்பு முழுதும் ஏற்றும் பின் வாங்காது போர் இட்டானம். அதனல் அவன் உடம்பு தோன்றப் பெருது படைக்-