பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

அரண்களையும் காவல் மரங்களையும் அழித்த நிலைகளையும் தம் ஏவல்படி கேட்டவர்கட்கு அருள் செய்த அருளிப்பாட்டையும், அங்ஙனம் கேளாதவர்களை அழித்து அவர்கள் நாடுகளைப் பாழாக்கிய தன்மைகளையும் அழகுறக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

இம் மன்னர் வேற்றரசரை வென்று கொணர்ந்தவற்றைத் தமக்கு என்று வைத்துக் கொள்ளாது, பிறர்க்கு என்று கொடுக்கும் பெற்றியர். இஃது, “உரிய எல்லாம் ஓம்பாது வீசி,” என்ற தொடரால் விளக்கமாகிறது. இம்மன்னர் பொய்க்குணத்தை அறவே வெறுத்தவர் ஆவர். பொய் கூறுவதனால் தேவர் உலகமும் தேவாமுதமும் கிடைப்பதேனும், அவற்றையும் கைவிட்டு மெய்யையே நிலை நிறுத்தும் பெற்றியர். இந்தப் பண்பினை மாங்குடி மருதனார் “உயர் நிலை உலகம் அமிழ் தொடு பெறினும், பொய் சேண் நீங்கிய வாய் நட்பினை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந் நெடுஞ்செழியன் தம் வெற்றிக்குப் பிறகு தமக்குரிய யாவரையும் வரவழைத்து அவர் அவர்கட்கு நற்பொருள்கள் ஈந்து மகிழ்ந்தவர். இத்தகைய குறிப்புக்கள் பல அம் மதுரைக்காஞ்சியில் காணப்படுகின்றன. அவற்றை எழுதப்புகின் அதுவே ஒரு தனி நூலாக முடியும்.

இம் மன்னர் சார்பில் பாடப்பட்ட நெடு நெல்வாடை இம் மன்னர் பகைமேல் சென்ற

2637-6