பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


கையில் "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன்" என்று பாராட்டி இருப்பதால் அவர்மாட்டு இவர்க்கு இருந்த மதிப்பும் புலனுகின்றன.

இவரது பாட்டின் இறுதி அடி "இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே" என்று முடிவதில் இருந்து, இம்மன்னர் இரப்பதற்கு ஈயா வறுமை நிலையினை அடையாதிருக்கும் பொருட்டேனும் பகை மன்னரை வெல்ல முயன்று நின்றவர் என்பது உறுதியாகிறது.

இங்ஙனமெல்லாம் அரசர்கள் தம் அரச போகத்தில் தாம் இருந்தும், அவ்வரச போகத்தில் அழுந்திக் கிடக்காமல் அருங்கவி பல புனைந்து அருங் கருத்துக்களையும் மக்களுக்கு அறிவுறுத்திச் சென்றிருக்கின்றனர். அவர் கட்கு நாம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.