பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


15. தொண்டைமான்
இளந்திரையன்

இது வரையிலும் சேர சோழ பாண்டியர் ஆகியமூவேந்தர் மரபைச்சார்ந்த அரசர்குலப் புலவர்களைப் பற்றிப் படித்து வந்தனம். அவ்வேந்தர் குடிகளுள் சோழர் குடித் தொடர்புடைய இளந்திரையன் என்பாருடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களையும் சிறிது காண்போமாக.

நாகபட்டினத்துச் சோழன் பிலத் துவாரத்தின் வழியே நாகலோகத்தைச் சார்ந்தனன். அங்கு இருந்த நாக கன்னிகையாகிய பீலிவளை என்பாளைக் கண்ணுற்றனன். கண்ணுற்ற சோழ மன்னன் அவளை மணந்து கொள்ள மனம் கொண்டனன். இக்கருத்தை அவளுக்குக் கூறியதும், பீலிவளை, மன்னா! இப்போது என்னை உன் வேட்கைக் காரணமாக மணக்க விரும்புகிறாய். அங்ங்னமே நம் இருவர் உள்ளமும் ஒன்றுபட்டு மணந்தபின், நம் இருவர்க்கும் இன்மகவு தோன்றினால் அம் மகவின் கதி என்னாவது? யானோ நாகலோகவாசி, நீரோ மண்ணுலக வாசி." என்று வினாவ நாகபட்டினத்துச் சோழன் "மாதே, நீ இது குறித்துக் கவலை கொள்ளவேண்டா! உனக்கு என்னுல் பிள்ளைப் பேறு கிடைக்குமானால், அப்பிள்ளையினைத் தொண்டைக் கொடியால் பிணைத்துக் கடலில் இட்டு விடுக. அம்