பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


இவ்வாறான பெருமைகட்கு உறைவிடமான இளந்திரையன் புலவரால் பாடப்படும் புரவலராக மட்டும் இன்றித் தாமே கவிபாடும் காவலராகவும் இருந்தனர். இவர் பாடிய பாடல்களாக நற்றிணையில் மூன்றும் புறநானூற்றில் ஒன்றும் காணப்படுகின்றன. இறையனார் அகப்பொருள் என்னும் நூலும், நன்னூல் மயிலை நாதருரையும் இவரால் இளந்திரையம் என்னும் நுால் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றன. இம் மன்னரால் ஆக்கப்பட்ட ஊரும் ஒன்று திரையனது ஊர் என்று நன்னூல் மயிலை நாதர் உரை கூறுகிறது!

நற்றிணையில் இளந்திரையன் பாடிய பாடல்களால் தலைவன் தலைவியருடைய அன் பின் மாட்சிகள் தெரிய வருகின்றன. ஓர் இடத்தில் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்தபோது கார்காலத்தில் வந்து விடுவதாகத் தலைவிக்கு உறுதிகூறிப் புறப்பட்டான். கார் காலமும் வந்தது. மழையும் பெய்தது. அதன் காரணமாகப் பிடவ மலரும், கொன்றைப் பூவும், தோட்டல் அலரும் மலர்ந்து தோன்றின. இவற்றைக் கண்ட தலைவி "இன்னமும் தலைவர் வந்திலரே" அவர் கூறிச் சென்ற கார்ப்பருவமும் வந்து விட்டதுவே" என்று கூறி வருந்தும்போது, தோழி "மாதே இது கார்ப்பருவம் அன்று. மேகம் பருவம் அல்லாத காலத்தில் கடல் நீரை முகந்து கொண்டு தாங்கமாட்டாமல் ஈண்டுப்