பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


கலங்களால் மறையுண்டு கிடந்ததாம். இங்ஙனம் போரிட்டு வீர சுவர்க்கம் புகுந்த காரணத்தால்தான் அவன் புலவர்களால் பாடும் புகழ் பெற்று விளங்கினான் என்பதை,

"சேண்விளங்கு நல்இசை நிறீஇ

நாநவில் புலவர் வாயு ளானே"

என்று பாடி முடித்துள்ளார்.

குறுந்தொகையில் இவர் பாடியுள்ள பாடல்கருத்துக்கள் இனிமை தரவல்லனவாக உள்ளன. பெண்யானையின் பசியினைப் போக்க ஆண் யானை யா என்னும் மரத்தின் பட்டையினை உரித்து அதன் நீரைப் பருகச் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றோர் இடத்தில் ஆண் மக்களுக்குத் தொழில் புரிதல் உயிர் என்பதையும் பெண்டிர்க்குக் கணவன்மார் உயிர் என்பதையும்,

"வினையே ஆடவர்க்கு உயிரே ; வாள் நுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்"

என்ற அடிகளில் காட்டியுள்ளார். இவர் பாடியுள்ள குறுந்தொகைப் பாடல் ஒன்றால் இவர்க்குக் கொடையில் உள்ள மனப் பண்பு நன்கு தெரிகிறது. ஒரு தலைமகன் தலைமகளுக்குக் கூறும் வார்த்தையாகக் குறிப்பிடுகையில்,

"இரவலர் வாரா வைகல் பல ஆகுக"

என்று கூறுகிறார். இதனால், இவ்வாறான நாட்கள் வருதல் ஆகாது என்பது குறிப்பு.

முன்னோர் தேடிய செல்வத்தைப் பின்னோர் செலவழிப்பின் அவர்கள் செல்வர் ஆகார்