பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


கொள்ளக்கூடும் என்று கருதியோ, அன்றி, வேறு எந்தக் காரணத்தாலோ உவமையாகவே கூறி உவமேயத்தால் தாம் கூறக் கருதிய கருத்தினை நம்மையும் ஏனையவரையும் யூகித்து அறியுமாறு செய்யுளை அமைத்து இருப்பது இவரது நுண்ணறிவுத்திறனை நன்கு புலப்படுத்துவதாகும். "நல்ல உருளையைக் கொண்ட வண்டியைச் செலுத்துவோன் விழிப்புடன் நன்முறையில் செலுத்து வானேயானல், தனக்கும் ஊறுபாடு எய்தப் பெருதவனயும் பிறர்க்கும் தீங்கினை விளைவிக் காதவனயும் வழியைக் கடந்து செல்வான். அவ்வாறு இன்றி அச் சகடத்தினைத் தாறுமாறாகச் செலுத்தினால், அவன் தனக்கும் தீங்கு ஏற்படுத்திப் பிறர்க்கும் இன்னலை விளைவித்துச் சகடத்தையும் துன்பத்திற்கு உள்ளாக்குவன் என்பதே இப்புலவர் புறநானூற்றில் புகன்ற பாட்டின் பொருள். இதன் உள்பொருள் காவ லாகிய வண்டியினைச் செங்கோன்மையாகிய நெறியில் செலுத்தாதுபோனால், பகையாகிய சேற்றில் காவல் சாகாடு அழுந்தித் தனக்கும் தன் கீழ் வாழ்வார்க்கும் பல தீக்கேடுகளை மேன்மேலும் தரும் என்பதாம் ;

"காவல் சாகாடு உகைப்போன், மானின்
ஊறுஇன்ருகி ஆறு இனிது படுமே ;
உய்த்தல் தேற்றன் ஆயின், வைகலும்
பகைக்கூழ் அள்ளல் பட்டு

மிகைப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே"