பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பயிற்சி

கீழ்வரும் தலைப்புக்கள் ஒவ்வொன்றையும் பற்றித் தனித் தனிக் கட்டுரையாக இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுக.

I. பாலைபாடிய பெருங் கடுங்கோ

1. பாலைபாடிய பெருங் கடுங்கோ என்னும் பெயரை நன்கு விளக்குக.

2. இவர் பாடியுள்ள பாடல்களின் சீரிய கருத்துக்களை விளக்கமுற எடுத்துக் காட்டுக.

II சேரமான் கணைக்கால் இரும்பொறை

1. மானம் என்பதைத் தலைப்பாகக் கொண்டு ஒரு கட்டுரை வரைக.

2. சேரமான் கணக்கால் இரும்பொறை என்பார் யார்?

3. இவர் மானம் உடையவர் என்பதை உதாரணந்தந்து நிலை நிறுத்துக.

III சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

1. பிரிவு என்பது எவரையும் கலக்கச் செய்யவல்லது என்பதை நன்கு எடுத்துக் காட்டுக.

2. “மாக் கோதை” என்பார் பெயர்க்குமுன் கொடுக்கப்பட்ட அடைமொழிகளால் நீ அறிவன யாவை?

IV சோழன் நல் உருத்திரன்

1. சோழன் நல் உருத்திரன்பால் அமைந்த இயல்புகள் யாவை?