உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளியங்காட்டான்

எண்ணி யெண்ணித்தினம் தேரடா! - நல்ல
இயல்பினை யேவெளி யாக்கடா!
மண்ணிற் பிறந்த மனிதரில் - நீயோர்
மாணிக்க மாவதை நோக்கடா!

என்னடா! என்னடா! என்னடா! - எங்கும்
இன்பம் விளைத்திட எண்ணடா!
கண்ணும் கருத்துமா யெண்ணடா - எண்ணின்
கடைத்தேற லாமிந்த மண்ணிலே!

100