பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்



குறும்பு

'காட்டில் திரியும் கடும்புலி ஐயகோ!
காலை கடுகிவந்து - நமது
வீட்டில் புகுந்ததென் ண்ணன்வீ ரிட்டணன்
விண்ணதி ரும்படியாய்!

'மின்னட்டும் கண்கள், மிரட்டட்டு மிப்புலி,
மீனாவை, யும்பிடித்து - மென்று
தின்னட்டு மென்றனன், அஞ்சித் திகைத்துஎன்
தெய்வமே!’ என்றழுதேன்.

அன்னை விரைந்தங்கு வந்தன ளென்னவோ
அக்கப்போ ராகுதென - அடா!
என்னடா, எப்புலி, எங்கு புகுந்ததென்
றிதயம் பதறிடவே!

'காடுமே டாகக் கரந்துறை யும்புலி
காப்புள்ள வீட்டினிலே - புகக்
கூடுமோ டா குறும் புப்பய லே'யெனக்
கோபித்துக் கொண்டனள்தாய்!

அக்கம்பக் கத்தினி லுள்ளவர் வந்தனர்
'ஆபத்து யாதெனவே - அண்ணன்
'கெக்கெக்கெக் கேயெனப் பல்லைப் யிளித்தனள்
'கேளிக்கை யின்'றெனவே.

103