உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்



மனங்கம ழாத மலர்களில் மதுரம்
மாத்திரம் இல்லையடா - என்றும்
குணங்கம ழாத குலங்களில் குதிரும்
கோத்திரம் இல்லையடா!

காசொடு குலவும் கதியினைக் கண்ணில்
காண்பதை இழந்திடினும் - என்றும்
'மாசொடு குலவும் மதியின னெனநீ
மாண்பதை இழக்காதே!

106