பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

அவனும் அவளும்

'சந்தைச் செலவுக்குக் காசில்லை' யென்றவள்
சங்கடம் செய்திடுவாள் - அவன்
'அந்திப் பொழுதெனும் செம்பென் புதையலை
அள்ளி யெடுத்திடென்'பான்.

'எந்திர மென்ன இயங்கியே என்னுடல்
எலும்புதோ லாச்சுதென்'பாள்; - அவன்
'சந்திரன் நின்முகங் கண்டதும் வெண்முகிற்
சந்தில் மறைந்த தென்பான்.

'நல்ல நகையொன்று மில்லாததால் நாணம்
நாக்கைப் பறிக்கு தெ'ன்பாள்; - அவன்
'எல்லையில் லாஎழில் முல்லை முகைநகை
ஏக்கம் தவிர்க்கு தென்'பான்.

'பெண்டான நாள்முதல் கண்டாங்கிச் சேலைக்கும்
பித்தேறி விட்ட தென்'பாள்- அவன்
கண்டாங்கி யென்னும்பேர் தண்டா மரைக்கிடின்
காதுங்களிக்கு மென்பான்.

"உற்றா ருறவின ரற்றுநா மின்றிங்
கொருகுடி யானோ'?மென்பாள்; - அவன்
'பற்றற்ற வாழ்விலிப் பாரெங்கும் சுற்றம்
பரிணமிக் கின்ற தென்'பான்.

107