உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

நன்று விரிந்த மலர்களிலுள்ள
நறுமண மவ்வளவும்-உள்ளம்
ஒன்றி யிருந்தவள் வாழ்வில் கமழ
உலகம் வியந்திடுமோ!

அல்லி மலர்ந்து கமழ்கையில் வந்தொரு
அசடன் பறிப்பதுபோல் - காலம்
ஒல்லவே வந்துன் னுயிரைப் பறித்தது
வோஎன்னுயிர்த்து ணையே

125