இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவியகம்
புகழ்
"புகழெ னும்நிலை புவியிற் பொதுவென
போகப் புறப்படுவேன்; புகும்
யுகயுகாந்தம் உவப்புலாதநல்
லொளியி லுறைந்திடவே
தாறு மாறுக ளற்றுத் துவக்கிய
தார்மிக வாழ்வுதனில், - அரும்
பேறு நான்கையும் பெற்றவ ரெய்தும்
(புக)
பெரும்பய னுற்றதென
'நல்ல செயல்களில் வல்லவர் யாவர்க்கும்
நல்வர' வென்றெவரோ-அங்கு
சொல்லும் நல்லுரை யென்செவி யோர்க்கும்
(புக)
சுபத்துக் கறிகுறியாய்!
ஊக்க முண்மை யுழைப்புகளொன்றி
யுறுதுணையானவுடன் - முற்றும்
யாக்கை பெற்றவ ரவசியம் நாடி
(புக)
யடையு மிடமதுவாம்!
இருள்க விந்திடும் வேளையறிவெனும்
இன்பம் பிறையொளிரும்-ஈனப்
பொருள்கு வித்தவர் போல்கதிர் காயின்மெய்ப்
(புக)
புன்கம் நிழல் குளிரும்!
33