இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளியங்காட்டான்
'பற்றில் லாதநல் லுள்ளம் படைத்தவர்
பாத மலர்ச்சுவட்டில் - பெரும்
வெற்றி யென்னு மெழுத்துகள் பொன்னில்
விளங்கப் பதிந்தனகாண்!
(புக)
தேவ னாகவே சீவன் நினைவெனும்
தேசில் கலந்திடவும்- தொழும்..........
சாவு மாயுடல் வேவது நோக்கிச்
சகமு மகங்கொளுமோ!
(புக)
134