இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவியகம்
அரியபொருள்
அரிதினும் அரிதான பொருள்பூமி யொன்றுதான்
என்றனைவ ரும் பகருவார்
அதைக்காட்டி லும்நல்ல பொருள் கல்வியென்றுசிலர்
அதைமறுத் துப் பேசுவார்
தருதிரென் றிருகையும் ஏந்தியிரம் போர்க்கெலாம்
தன்மன முவந்து வாரித்
தருவதால் வருங் கீர்த்தி தான்பொருள் யாவினு
தலையான தென்பர் தக்கோர்
பெரிதும் நான் ஆராய்ந்து பார்த்த அளவில்
பெரியோரைக் கேட்ட அளவில்
பெருமையுஞ் சிறுமையுங் கருதாமல் உண்மையே
பேசும்பரி சுத்தமான
இருதயத் தைப்போலும் அரியபொருள் பிறிதொன்
றிருப்பதாய்த் தெரியவில்லை
என்பதனை இன்றுமக் கன்போடு ரைக்கிறேன்
இவ்வுலகு தானறியவே.