பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

தழுவல் : வசந்தம்


எவ்வித மோ அறியோம் - அது
எங்கிருந் தோ அறியோம்!
வசந்தம் வருகையிலே - வரும்
வண்ணப் பறவை இனம்!
பசுந்தளிர்க் கைகளினால் - மரம்
பரிந்து தழுவும் தினம்!

எவ்வித மோ அறியோம் - அது
எங்கிருந் தோ அறியோம்!
அரும்பும் மலர்களிலே - பர
மானந்த மானமணம்!
சுரும்பின் உடல்தனிலே - ஒரு
சுந்தர ஆபரணம்!

எவ்வித மோ அறியோம் - அது
எங்கிருந்தோ அறியோம்!
தேகம் புளகமுறச் - செய்யும்
தென்றல் திரிந்தசைத்து;
மோகத்தை மூட்டி விடும் - குயில்
மோகனப் பண்ணிசைத்து!

எவ்வித மோஅறியோம் - அது
எங்கிருந் தோஅறியோம்!
சின்னஞ் சிறுபிறையில் - பொங்கிச்
சிந்தும் எழில் நிலவு!
கன்னங் கரிய குழல் - மாதர்
கண்ணில்கா தல் பொலிவு!

19