பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

மனதை மாண்பு செய்து மதியில்
மணமெ ழுப்பு கவிதை!
புனித மான மனிதப் - பிறவிப்
பொருளு ணர்த்து கவிதை!

தலைமை தாங்கும் தமிழ்ப்பூம் - பொழிலில்
தளைய விழ்ந்து கமழப்
புலமைதேங்கும் கொடிகள் - அழகாய்ப்
பூத்த ளித்த கவிதை!

22