இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளியங்காட்டான்
அறைபட்டும், அடிபட்டும் மனைவி, மக்கள்
அகமனைத்தும் மறந்துதன்தாய் நாட்டுக் காகச்
சிறைபட்ட தொண்டனுக்குச் சுதந்த ரத்துச்
செய்தியுறும் இன்பம் போன் றெனக்கு மாவார்!
மடமயிலே! இளங்குயிலே! கிளியே! வண்டே
மறைவாக நீவிரெலாம் சென்றி ருங்கள்!
தடந்தடமாய்ப் பார்த்துக்கொண் டிருக்கி றேன்நான்;
தலைவரினி வருகின்ற நேரம் தானே!
28