உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

என்னகந் தன்னையோர் கோவிலாய்க் கொண்டதில்
என்றும் இருப்பவரை - ஒரு
புன்னகை யால்வர வேற்றுக் களிக்கப்
பறந்தெதிர் பார்த்திடவே!

வாழும் பயிரின மோங்கி வளர்ந்திட
வானத்தைப் பார்ப்பதுபோல் - இன்று
வீடு மறந்து வினைமறந்து நின்றேன்
வீதி முனைதனிலே!

30