உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

தீண்டும் அளவிலென் உயிர்தளிர்த்திடுகிற
தெய்விக வடிவான - இனிய
தேனெ னும்படி உன்னெழில் முழுவதும்
தினம்.நனி மாந்தியபின்
ஆண்ட மானில அன்னையை வழிபடும்
அழகிய வைகறையில் - உன்
அகங்க மழ்நறு மலர்களைக் கொய்தவள்
அடிகளில் துவேனோ!

56