உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

இதயம் தன்னி லிருந்த நெருப்பினை
எடுத்துக் கொட்டி இருந்தனள் என்கிளி!
நதியின் போக்கில் புனையின் செல'வென
நன்மை தீமையும் நம்முயிர் வேட்கையின்
விதியை ஒட்டி விளைந்திடு மென்றஎன்
வீறு கோளுரை வெந்து கருகவே
புதிய வேதனை பொங்கி எழுந்தது:
புவியும் சக்கர வட்டம் சுழன்றதே!

65