உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

பலத்தி லவனை நிகர்பவரில்லை;
படிப்பில் மெத்தவும் கைவரப் பெற்றோன்
நிலத்தி லவனை யெதிர்த்தின்று நேரில்
நிற்க வேறுபி ராணியொன் றில்லை!

ஆண்ட வன்றனை வேண்டுவன், கொல்ல.
அவலம் புழுவினைக் கோத்ததும் நீரில்
துண்டில் வீசித் தொலைத்திடு வான், நீர்
துரம் போய்மறை வீர்விரைந் தென்றே.

96