பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


ஒரு பெரும் செல்வந்தரை அழைத்து, கலைஞரிடம் ஓர் அறுபதினாயிரம் ரூபாய் கொடுத்தனுப்புங்கள்’ என்று கூறினார்.

அந்தச் செல்வந்தர் மகாத்மா கூறியபடி தொகையை கவிஞர் தாகூரிடம் வழங்கியதும், நேராக சாந்தி நிகேதன் சென்று ஒய்வெடுங்கள்” என்று அப்போது காந்தி அடிகள் இடைமறித்து கூறினார் கவிஞரிடம்.

‘விசுவபாரதி’ கலைக் கழகத்தை வளர்க்கப் பணம் திரட்டினார் கவிஞர் தாகூர். இந்தியாவிலே உள்ள பல மாநிலங்களுக்குச் சென்று பணம் சேகரித்தார். அறுபது வயதில் அவர் நிதி திரட்டிட ஊர் ஊராக அலைந்து திரிந்து அரும்பாடுபட்டார். தனது எழுபத்தைந்தாம் வயதில் காந்தியடிகளிடம் அவர் பெற்ற கடைசி நிதியோடு அதை முடித்துக் கொண்டார்.

தாகூர் பாடல்களின் கற்பனை வளத்தை உலக அறிஞர்களில் ஏராளமானவர்கள் போற்றினார்கள்; புகழ்ந்தார்கள்; பாராட்டு விழா கூட்டங்களை நடத்திக் கவுரவித்தார்கள். கவிஞர் தாகூரிடம் அதிகமான உயர்வு நவிற்சி அணி இராது; கண்டதை கேட்டதை, உணர்ந்ததை மட்டுமே கூறுவார். அவரது எழுத்தோவியங்களைக் கற்போர் மனக் கண்ணிற்கு புரியும் வகையில் எழுதுவார். அதற்கு இதோ இரண்டு அஞ்சல்கள்;

வெட்ட வெளியில் கிடைக்கும் கடல் அலைந்து புரண்டு நுரைக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம், கட்டுண்டு வருந்தும் பெரிய பூதம்போன்ற தோற்றம் மனத்தில் எழுகின்றது. அந்தப் பூதத்தின் அகன்ற வடிவான வாய்க்கு எதிரே, கடற்கரையில் நாம் நம் வீடுகளை அமைத்துக் கொண்டு ஆது புரள்வதைப் பார்க்கின்றோம். என்ன