பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

103


வரவேற்றார். கொள்கையில் மிக உறுதி கொண்ட கவிஞர் தாகூர். மற்றவர்களிடம் பழகும் போது குழந்தையிலும் குழந்தையாய் விளங்கி வந்தார்.

மனித குலமேதைகளாகச் சிறந்த இவர்கள், அவரவர் கொள்கைகளில் மிகமிக உறுதியாக நின்று உயிரையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்த சான்றாண்மையே அவர்கள் இருவரையும் வானளாவ உயர்த்தியது. பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே என்ற பண்பும், தூய நெஞ்சும், தூய வாழ்க்கையும் ஒருவரை ஒருவர் வெறுப்பது, விரோதிப்பது, அவமதிப்பது, என்பனவற்றைக் கணவிலும் எண்ணாமல் வாழவல்லவர்கள் என்பதை மெய்பித்துக் காட்டிய மனித நேயர்களாக அவர்கள் வாழ்ந்தவர்கள்.

காந்தியடிகளும், கவிஞர் தாகூரும் இருவேறு வகையில் தொண்டாற்றி அவரவர் லட்சியங்களுக்கு சந்திர சூரியர்களாக, ஒருவர்க்கு ஒருவர் துணையாக, விளங்கி மறைந்தவர்களாவர்.

தாகூர் நடத்தி வந்த சாந்திநிகேதன் பொருளாதாரச் சிக்கலால் தடைப்பட்டு விடக் கூடாது என்ற நோக்க முடையவராக காந்தியடிகளும், அதனைப் போலவே, காந்தியடிகளது அரசியல் கிளர்ச்சிகள் ஆங்கிலேயர்களது அடக்கு முறைகளால் பலவீனப்பட்டுவிடக் கூடாது என்று தாகூரும் அரும்பாடுபட்டார்.

தாகூரின் எழுபதாம் ஆண்டு விழா, 1931-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மிகச் சிறப்பாக நடைபெற எல்லா ஏற்பாடுகளும் நடந்தேறியது. உலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை எல்லாம் திரட்டி தாகூர் பிறந்த நாள் நினைவு