என்.வி.கலைமணி
105
என்றால், அது மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் போர் ஒன்றே ஆகும்.
போர் நடந்து முடிந்தவுடன் பிரெஞ்சு நாடு சென்றார். போரால் பாழடைந்து போன பல ஊர்களைக் கண்டு மனம் வருந்தினார். ஆயிரக் கணக்காக மாண்டொழிந்த மக்களின் மயானக் கல்லறைகளைக் கண்டு மனம் கலங்கினார்! அங்கிருந்து ஜெர்மன் நாடு சென்றார்! நெஞ்சம் நெருப்பிலே மூழ்கியது போலானார்! அவ்வளவு போர்க் கொடுமைகளைத் தான் அங்கே அவர் கண்டார்!
சீன நாட்டிற்கு 1944-ஆம் ஆண்டு சென்றார். அந்த நாட்டு அறிஞர்கள் அவரை அமோகமாக வரவேற்று மகிழ்ச்சியுற்றார்கள். அதேபோல சீன அறிஞர்களும் தாகூர் சாந்திநிகேதன் வந்து, அங்குள்ள விசுவபாரதி, ஸ்ரீ நிகேதன் போன்ற கலைக் கோட்டங்களைக் கண்டு வியந்து போனார்கள்!
கவிஞர் தாகூர் இத்தாலி, ரஷ்யா, போன்ற நாடுகளுக்கும் சென்றார்! அந்தந்த நாட்டின் கல்வி முறை, விவசாய முறை ஆகியவற்றைக் கண்டார். ஒவ்வொரு நாட்டிலும் பள்ளி மாணவர்களைப் பார்ப்பதே அவர் செல்லும் நாடுகளில் முதல் பணியாக திட்டமிட்டார்! அதற்கேற்ப மாணவர்களைக் கண்டு மகிழ்ந்தார்!
மாணவர்களும் அவரவர் புத்தகங்களிலே கவிஞர் தாகூரின் புகைப்படங்களை ஒட்டி வைத்துக் கொண்டு அப்படத்தின் அடியில் தாகூர் கையெழுத்துக்களைப் பெற்றுக்கொண்டார்கள். அது போலவே, அந்தந்த பள்ளி மாணவர்கள் தாகூரைப் பற்றி எழுதி வைத்திருந்த கட்டுரைகளையும் பெற்றுக்கொண்டு வந்து