பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


தனது வாழ்நாள் இறுதிவரை அவற்றைச் சாந்திநிகேதன் நூல் நிலையத்திலே பாதுகாத்து வந்தார்.

தாகூரின் அரிய பண்புகளில் மிக முக்கியமானது அனைவரிடமும் அன்பு செலுத்துவதுதான். அன்புக்கு உண்டோ அடைக்குந் தாழ்? அன்பு என்றால், உறவினர்களிடம், நண்பர்களிடம் காட்டிடும் அன்பன்று! எங்கு இயல்பாக அன்பு செய்வதில்லையோ அங்கு அன்பு செலுத்துவதே அன்புக்குரிய இலக்கணமாகும். தாகூரது அன்பின் மிகுதி அவர் யாரையும் விரோதித்தவரல்லர், வெறுத்தவரல்லர், பகைத்தவரல்லர். அதனால், விருப்பு வெறுப்பு என்பது அவரிடம் அண்டவே இல்லை எனலாம். அதனால்தான் தனிப்பட்டவர்கள் மேல் அவருக்கு வெறுப்புணர்ச்சி உருவானதில்லை. ஆனால், ஆங்கிலேயர்களது ஆட்சியை மட்டும் அடியோடு வெறுத்தார்! வெள்ளையர்களை அல்ல!

தாகூர் மறைந்தார்

கவிஞர் தாகூர், தனது தாயார், தந்தையார், தன்னுடன் பிறந்து வளர்ந்த அண்ணன்மார், தமக்கையர், நண்பர்கள் தன்னிடம் பணிபுரிந்த அன்பு பணியாளர்கள் ஒவ்வொருவராக மரணமடைந்து வருவதைத் தனது வயோதிகக் காலத்தில் கேட்டுக் கேட்டு நெஞ்சமே கலங்கிப் போய் விட்டார். கடைசியாக ஒரே ஒருவர் தான் மரணத்தை மீறி கவிஞர் தாகூருடன் இருந்தார். அவரோடு பிறந்த ஒரே ஒரு தமக்கைதான் அப் பெருமாட்டி!

கவிஞர் தாகூரின் அருமை மனைவியும், மூன்று மக்களும் முன்பே மறைந்து போனார்கள். அவருடன் உயிரோடு ஒரு மகனும் ஒரே மகளும், ஒரே ஒரு பேரனும், பேத்தி ஒருத்தி