பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

111நான் விடை பெற்றுக் கொண்டேன். என் சகோதரர்களே விடைகொடுங்கள். எல்லோர்க்கும் வணக்கம் செலுத்தி விடைபெற்றுப் புறப்படுகிறேன்.

இதோ என் இல்லத்தின் சாவிகளை எல்லாம் திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் வீடு பற்றிய உரிமைகளை எல்லாம் விட்டு விடுகின்றேன்; உங்களிடமிருந்து இறுதியான அன்பு மொழிகளே வேண்டுமென்று கேட்கின்றேன்.

நாம் நெடுங்காலம் அடுத்து வாழ்வோராக இருந்தோம். ஆனால், நான் கொடுக்கக்கூடியதை விட மிகுதியாகப் பெற்றுக் கொண்டேன். இப்போதோ பொழுது விடிந்து விட்டது. என் இருண்ட வீட்டை ஒளி பெறச் செய்திருந்த விளக்கோ அணைந்துவிட்டது. புறப்பட ஆணை பிறந்து விட்டது. யானும் பயணத்திற்கு ஆயத்தமாக இருக்கின்றேன்.

(கீதாஞ்சலி பாடல் 93)

இந்த வாழ்வின் வாயிலுக்குள் நான் சேர்ந்தது எப்போது என்பது எனக்குத் தெரியவில்லை.

நள்ளிரவில் காட்டில் மலரும் அரும்புபோல் இந்த வியப்பான சூழலில் நான் தோன்றுமாறு செய்த சக்தி எதுவோ?

காலையில் ஒளியைக் கண்டபோது, நான் இந்த உலகத்திற்கு அயலான் அல்லன் என்பதை நொடிப் பொழுதில் உணர்ந்தேன். பெயரும் வடிவும் அற்ற அந்தப் பரம் பொருள் என் தாய் வடிவாக இருந்து, என்னைத் தன் கையில் அனைத்துக் கொண்டது.

அதுபோலவே, மரணத்திலும், நான் என்றும் அறிந்த ஒன்றாகவே, உணர முடியாத அந்தப் பரம் பொருள் என் முன்