பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

19



கம்பங்களை நடுவதற்குத் தோண்டிய குழிகளின் கீழே மேலும் ஆழமாகத் தோண்டத் தோண்ட என்னென்ன புதுமைகள் புலப்படுமோ என்று ரவீந்திரர் எதிர் பார்ப்பாராம் ஆனால், வேலைக்காரர்கள் கம்பம் நடுமளவு ஆழம்தானே தோண்டுவர் அதனால், சிறுவன் மனம் ஏமாறும்!

நீலவாளில் நிலவு இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி, அதன் விரிப்பு அவருக்கோர் விருந்தாகவே விளங்கியது.

வாணவெளியில் அதிகாலையிலும், மாலையிலும் பாடிப் பறந்து செல்லும் பறவை இனங்களின் பல்விதக் குரலோசைகள் அவருடைய காதுகளுக்கு ஓர் இசைத் தேனாகவே இனித்தது.

சுருக்கமாகச் சொன்னால், அவர் வானியல் ஆய்வுப் பேராசிரியரைப் போலவே அவற்றையெலாம் கேட்டுக்கேட்டு, பார்த்துப் பார்த்துப் புரிந்து கொண்டார். அந்தச் சிறுவயதில் அதாவது ஏழெட்டு வயதுக் காலத்திலேயே அவர் ரசிக்காத, கற்பனை செய்யாத, ஆழ்ந்து நோக்காத துறைகளே இல்லையென்று கூறலாம். ஆன்மிகத் துறை ஒன்றைத் தவிர!

தாய்மொழியில் ஆரம்பக் கல்வி

ரவீந்திர நாத் தாகூரின் அண்ணன்கள் அனைவரும் நாள்தோறும் பள்ளிக்குச் சென்று வருவார்கள். இவர் மிகமிகச் சிறுவர் என்பதால், இவரைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப் பெற்றோருக்கும் விருப்பமில்லை; உடன் பிறப்புக்களுக்கும் மனமில்லை. அதனால், அவர் வீட்டிலே தனிமையாக இருக்கும் நிலை ஏற்பட்டது.

சிறுவன் ரவீந்திரருக்குத் தனிமை பிடிக்கவில்லை; ஒருவித விரக்தியும், வெறுப்பும் ஏற்பட்டது. அதனால், அவர் கல்வி