பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

29


அப்போதுள்ள விண்மீன்களின் தோற்ற இயல்புகளைச் சுட்டிக் காட்டிக் கற்பிப்பார். இவ்வாறு வானவியல் இயக்கத்தைக் கற்பிப்பதன் மூலமாக, ரவீந்திரருக்கு வானியல் கல்வியைப் போதித்தார்.

இமயமலைச் சாரல்களில் தந்தையும் மகனும் காலையில் எழுந்து நடை பயிலும்போது, மரம், செடி, புல், பூண்டு போன்றவற்றின் பயன்பாடுகளையும் சொல்லிக் கொடுத்து, தாவரவியலின் தத்துவங்களை எடுத்துரைப்பார்.

இன்றைய மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும் பரீட்சையில் எந்தெந்த கேள்விகள் வருமோ, அவற்றை இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு தெரிந்து கொள்கிறார்கள். அக் கேள்விகளுக்குரிய விடைகளை கிளிப் பிள்ளைகளைப் போல மனனம் செய்கிறார்கள். தேர்வில் அக் கேள்விகளுக்குரிய பதில்களை மனப்பாடம் செய்தபடி வந்து எழுதுகிறார்கள்.

எந்தக் கேள்விகளைக் கேட்டாலும், அதை உணர்ந்து எழுதும் அறிவு என்று மாணவர்களிடம் வளருகின்றதோ அன்றுதான் மாணவர்களின் அறிவு நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படும்! இந்த எண்ணமுடைய லட்சியவாதிதான் தேவேந்திரநாத் தாகூர்.

அதனால்தான் தன் செல்வன் ரவீந்திரர் எதையும் எண்ணி உணரும் அறிவு வளர அரும்பாடுபட்டார். அதற்கு ஒரு தந்தை என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றையெல்லாம் செய்து கல்வி கற்க வைத்தார்.

சில நேரங்களில் ரவீந்திரர் தனது தந்தையிடம் அவர் சொல்லிக் கொடுக்கும்போது அடாவடித் தனமான கேள்வி