பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

31


சாந்தி நிகேதனில் அனுபவித்த தியான அமைதிச் சூழ்நிலைகளும் அவர் மனதை விட்டு அகலவில்லை. அந்த இன்பங்களை எண்ணும் போதெல்லாம் பள்ளிக்கூட கல்வி, கல்லூரிக் கல்வி எல்லாம் அவரைக் கவரவில்லை.

தந்தையுடன் ரவீந்திரர் இமயமலைச் சாரலுக்குச் சென்று திரும்பியது முதல் தமது தம்பியின் சிந்தனையில் ஏதோ ஒரு திருப்பு முனை நிகழ்ந்துள்ளதை அவரது அண்ணன்கள் கண்டார்கள். அதனால், பள்ளி கல்லூரிக் கல்வியை தம்பி வெறுப்பதை அவர்கள் எவரும் எதிர்க்கவில்லை. காரணம் தம்பி ரவீந்திரன் தானாகவே படித்து முன்னேறி அறிவுத் தெளிவடைந்துள்ளான் என்பதை அவர்கள் அறிந்தார்கள்.

அதனால், ரவீந்திரா் வீட்டிலிருந்தவாறே தனது அறிவை வளர்த்துக் கொள்வதை அவர்கள் ஆதரித்தார்கள்.