பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

33



ஊருக்கு மட்டும்தான் சீர்திருத்தவாதியின் உபதேசம்! அவனது வீட்டுக்குள் இல்லை என்ற நிலையிலே நில்லாமல், மூடப் பழக்க வழக்கங்களில் ஒன்றான, பெண்களின் முகத்தையும் உடலையும் மறைத்துக் கொள்ள பயன்பட்ட ‘பர்தா’வை அகற்றிய சீர்திருத்தக்காரா் ஆவார்.

அந்த நேரத்தில் வங்காளத்தில் பெண்கள் அணியும் பர்தா முறையை அகற்றுவதென்பது அவ்வளவு சாமானியமானதல்ல. ஆனாலும் எது வந்தாலும் ஏற்கத் தயார் என்ற துணிவோடு தாகூர் குடும்பம் அந்த முறையை அகற்றி விட்டது. தனது ஐந்தாம் அண்ணன் செய்த இந்த மகத்தான சமுதாய சீர்திருத்தச் செயல் ரவீந்திரருக்கு மிகவும் பிடித்திருந்தது.

என்றாலும், அவரது ஐந்தாவது அண்ணனிடமிருந்து அவருக்கு மிகவும் பிடித்தது அவருடைய இசை ஞானம் தான். அதே மாதிரி அவருடைய நாடகக் கலை அறிவும், நடிப்பாற்றலும் ரவீந்திரருக்குப் பிடித்திருந்தது. அக்கலையைத் தாமும் பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டிக் கொண்டே இருந்தது.

ஜோதிரீந்தா் தாகூர் இசைக் கருவிகளை இயக்கிப் பாடும் போதெல்லாம், தம்பி ரவீந்திரர் தனது பாடல் புனையும் ஞானத்தால் அண்ணனுக்கேற்ற ‘பா’க்களை எழுதிக் கொடுப்பார்! எழுதிக் கொடுப்பதோடு மட்டும் நில்லாமல் தமையனின் ராகத்திற்கேற்றவாறு பாடவும் செய்வார்; இசை ஆர்வம் அவ்வளவு இருந்தது அவருக்கு!

எதிர்காலத்தில் உலகப் பெரும் கவிஞர்களுள் ஒருவராக விளங்கப் போகின்ற தாகூருக்கு இந்தப் பயிற்சி ஒரு குறிப்பிடத்தக்க காரணமாகவே அமைந்தது. ஒவ்வொரு நாளும்,