பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.5. ஆங்கிலமொழியின்
ஆதிக்கத்தை எதிர்த்துப்
போராடினார்

கவிஞர் தாகூர் மனதில் உலகம் வாழ்ந்து கொண்டிருந்தது; உலக மக்கள் எல்லாரும் அவருடைய அன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். அதே போல தாகூர் மனமும் உலக மக்களது நல்வாழ்வின் மீதே நாட்டமாக இருந்ததால், அவரது கவிதைகளில், சிறுகதைகளில், நாடகங்களில், பாடல்களில் மக்கள் வாழ்க்கைக்குரிய நீதிகளை, நெறிகளை, அறவழிகளை, அன்புரைகளை, பண்புரைகளை, நாட்டுப்பற்றுணர்வுகளை, ஆன்மிக மார்க்கங்களை, பொதுச் சேவைகளின் மாண்புகளை எல்லாம் விதையாக விதைத்தார்.

உலக மக்கள் அனைவரும் அமைதியான, இன்பமான வாழ்வு வாழ வேண்டும் என்பதே தாகூருடைய தொண்டுகளின் அடிப்படையான, உணர்வாக அமைந்தது.

கவிஞர் தாகூர் எழுதிய பாடல்களில் வங்க நாட்டின் முன்னேற்றமே தலையாயதாக இருந்தது. வங்க மொழியின் பெருமையே, தாய்மொழிப் பற்றே தன்மான உணர்சிசியாகத்