பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கவியரசா் இரவீ்ந்திரநாத் தாகூர்


தலை நிமிர்ந்து நின்றது. திரும்பத் திரும்ப அந்த உணர்ச்சிகளையே அவருடைய பாடலில் அவர் கூறியிருந்தார்.

வங்க மக்கள் இடையே பரவியிருந்த ஆங்கில மோக வெறியை வீழ்த்திட அவர் பெரும்பங்காற்றினார். சிங்கமாக நின்றார்!

எந்தப் பள்ளிகளானாலும் சரி, ஆங்கிலத்தின் குழந்தைகளுக்குப் பாடல்களைப் போதிப்பதை அவர் மிக வன்மையாகக் கண்டித்தார். ஒவ்வொரு பள்ளியும் தாய்மொழி மூலமாகத்தான் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்பதிலே அவர் கண்டிப்பாக இருந்தார். ஏனென்றால், தாய் மொழியின் வாயிலாகத்தான் அறிவை வளர்க்க வேண்டும் என்ற உலக நோக்கம் அவரிடையே ஆழமாக வேரூன்றியிருந்தது.

எவருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஆங்கிலேயர் ஆட்சியினுடைய கல்விக் கொள்கைகளை ஆணித்தரமாக எதிர்த்து, உறுதி வாய்ந்த உள்ளத்தோடு எடுத்துரைத்தார்! அதற்கு முன்னோடியாக, ஆங்கிலத்திலே பேசுவதைக் கண்டனம் செய்தார். அதை ஒரு பழக்கமாக்கக் கூடாது என்று தாகூர் போராடினார்.

அதற்குச் சான்றாக, கவிஞர் தாகூர் தனது தாய் மொழியிலேயே எல்லா நிகழ்ச்சிகளிலும் பேசிப் பெருமை பெற்றார். மற்றவர்களும் தாய் மொழியிலேயே எழுத, பேச வேண்டும் என்று வற்புறுத்தினார். அறிவுறுத்தினார்.

கல்கத்தா பல்கலைக் கழகத்துப்பட்டமளிப்பு விழா சொற்பொழிவாற்றிட செல்வோர் எல்லாரும், அங்கே சென்று ஆங்கிலத்திலே பட்டமளிப்பு விழா உரையாற்றக் கூடாது