பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

51


நிகேதன் என்ற கலைக்கோட்டம் என்பதையும் முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.

இப்போது கவிஞர் தாகூருக்கு ஏற்பட்டுள்ள புத்துணர்வு சாந்திநிகேதன் என்ற இத்தொண்டுக் கோயிலைக் கலைத் தொண்டு புரிய வழி வகுப்பதாகும்.

சாந்திநிகேதனத்தைப் பற்றி உலக உத்தமரும், அகிம்சா மூர்த்தியுமான மகாத்மா காந்தியடிகளார் என்ன பேசுகிறார் என்பதைக் கேளுங்கள்;

“ராஜ் கோட்டிலிருந்து சாந்திநிகேதனுக்குச் சென்றேன். அங்கே ஆசிரியர்களும், மாணவர்களும் என்னை அன்பில் மூழ்கடித்து விட்டனர். எளிமையும் அன்பும் கலந்ததாக இருந்தது. வரவேற்பு இந்த சாந்திநிகேதனில்தான் காக்கா சாகிப் என்பவரை நான் முதன் முதலில் சந்தித்தேன். காகா என்றால் சிற்றப்பா என்று பொருள் என்பதையும் உணர்ந்தேன்.

“பல ஸ்தாபனங்களையும் பார்த்து அனுபவம் பெறுவதற்காகக் காக்கா சாகிப் அப்பொழுது பிரயாணம் செய்து வந்தார். நான் சாந்திநிகேதனுக்குச் சென்றபோது அவர் அங்கே இருந்தார். சிந்தாமணி சாஸ்திரியும் அப்பொழுது அங்கே இருந்தார். இவருவரும் அங்கே சமஸ்கிருதம் கற்பிப்பதில் உதவி செய்து வந்தார்கள்.

தென்னாப்பிரிக்காவில் நான் துவக்கிய மாணவர் பள்ளியைச் சேர்ந்த போனிக்ஸ் குடும்பத்தினருக்குச் சாந்திநிகேதனில் தனி இடம் கொடுத்திருந்தார்கள். அக் குடும்பத்திற்குத் தலைவராக இருந்தார். மதன்லால்காந்தி, போனிக்ஸ் ஆசிரமத்தின் விதிகள் யாவும் இங்கேயும் கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வருகின்-