பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

53


இருக்கும் ருசியே இதற்குக் காரணமக இருக்கலாம். ஆகவே, நாங்கள் இப்பரீட்சையில் இறங்கினோம்.

இதுபற்றி தமது கருத்தைத் தெரிவிக்குமாறு கவிஞர் தாகூரை நான் கேட்டதற்கு, அதை ஆசிரியர்கள் ஆதரிப்பதாயிருந்தால் தமக்கு ஆட்சேபமில்லை என்று கூறினார். ‘இந்தச் சோதனையில் சுயராஜ்யத்தின் திறவு கோல் அடங்கியிருக்கிறது’ என்று கவிஞர் சிறுவர்களிடம் கூறினார்.

இந்தப் பரீட்சை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஸ்ரீ பியர்சன் தமது உடலை வருத்திப் பாடுபட்டார். அதிக உற்சாகத்தோடு இவ் வேலைகளில் ஈடுபட்டார். காய்கறிகளை நறுக்குவதற்கு ஒரு கோஷ்டி, தானியத்தைச் சுத்தம் செய்வதற்கு ஒரு கோஷ்டி, என்று இவ்விதம் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கோஷ்டி அமைக்கப்பட்டது.

சமையலறையையும், அதன் சுற்றுப் புறங்களையும் சுத்தமாக வைத்திருக்கும் வேலையை நாகேன் பாபுவும், மற்றவர்களும் மேற்கொண்டனர். கையில் மண்வெட்டியுடன் அவர்கள் வேலை செய்வதைப் பார்க்க எனக்கு ஆனந்தமாக இருந்தது.

அங்கே நூற்றியிருபத்தைந்து பையன்களும், அவர்களின் ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் எல்லோரும், உடலுழைப்பான இந்த வேலையைச் சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்று எதிர் பார்த்துவிட முடியாது. தினமும் விவாதங்கள் நடந்து வந்தன. சிலர் சீக்கிரத்திலேயே சோர்வடைந்து விட்டனர் என்பது தெரிந்தது. ஆனால், அப்படிச் சோர்ந்து விடக் கூடியவரல்ல பியர்சன். எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்துடன் சமையலறையிலோ அதன்