பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

55


ஏற்பட்ட சில அனுபவங்கள் உபாத்தியாயர்களுக்குப் பயனுள்ளதாகவே இருந்திருக்க முடியும்.

சாந்திநிகேதனில் கொஞ்ச காலம் தங்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், விதியோ, வேறு விதமாக இருந்து விட்டது. நான் சாந்திநிகேதனத்திற்கு வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இதற்குள் கோபாலகிருஷ்ண கோகலே காலமாகி விட்டார் என்று புனாவிலிருந்து எனக்குத் தந்தி வந்தது.

சாந்திநிகேதனும் துக்கத்தில் ஆழ்ந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள். தேசத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் குறித்துத் துக்கப்படுவதற்காக சாந்தி நிகேதனின் கோயிலில் ஒரு விசேஷக் கூட்டம் மிகுந்த பயபக்தியுடன் நடந்தது. அன்றே நான் என் மனைவியோடும், மகன் லாலுடனும் புனாவுக்குப் புறப்புட்டேன். மற்றவர்கள் எல்லோரும் சாந்திநிகேதனிலேயே தங்கினார்கள்.

(காந்தியடிகள் எழுதிய “சத்திய சோதனை”
பக்கம் 456-453)

தேவேந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனை ஓர் அமைதிக்கான ஆசிரமமாக உருவாக்கினார்! அவருக்குப் பிறகு அதன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கவிஞர் தாகூர், அந்த அமைதிக் கோட்டத்தைக் கலைக் கோயிலாக்கி உலகத்துக்கே ஒரு கல்விக் கோட்டமாக்கினார்! ஆண்டுதோறும் உலகக் கல்வியாளர்கள் அங்கு வருகை தந்து, அங்கே நடைபெற்றுவரும் அறிவற்புதங்களைக் கண்டு களித்துக் கற்றுச் செல்கிறார்கள்.

ரவீந்திரநாத் தாகூர். மேலாளராக இருந்தபோது. கவிஞரின் உள்ளத்தில் குழந்தைகள் மேல் அன்பும், அவர்களது கல்வி போதனைகளில் அக்கறையும் கொண்டிருந்தார். இன்றைக்கு