பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


வேண்டுமானல் எண்ணற்றோர் குழந்தை நலம் பேணுபவராகவும். குழந்தைகளைப் பற்றிப் பாடிய கவிஞர்களாகவும் வரலாம்; வாழலாம் ஆனால், கவிஞர் தாகூரைப் போல குழந்தைகளுக்காகப் பாடியவர்கள், அவர்களது எதிர் காலம் மேல் அக்கறை கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே ஆவர்!

இளம் பிஞ்சுகளான குழந்தைகள் அதனதன் ஆசைகளைப் போல ஆடிப்பாடி வளரவேண்டும். கட்டுப்பாடுகள், இருக்கக் கூடாது என்பது அவரது ஆவல். அவ்வாறு அந்தக் குழந்தைகள் வளர்ந்தால் தான், உள்ளத்திறனும், உயர்வும், எண்ண எழுச்சியும் பண்பாடும் சிறப்பும் என்பது அவரது முடிவு. அதனால்தான், குழந்தைகளின் அறிவை வளர்க்கும் மென்மைபான கல்வியைப் போல வேறொன்றும் இல்லை என்று அமெரிக்கக் குழந்தைகள் விழாவிலே அவர் பேசிய போத பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் கவிஞர் தனது இளமைக் காலத்தில் கல்விக்காகப் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் அவர் அடிக்கடி நினைவு கூருவார். அந்த அனுபவத்தைக் கொண்டு தான், பள்ளி வாழ்க்கை ஒரு சிறைக் கூடமாகக் குழந்தைகளுக்குக் காட்சிதரும் கொடுமையை எப்படியும் மாற்றியே தீரவேண்டும் என்று திட்டமிட்டார். அது போலவே, உணர்வற்ற பாடப் புத்தகங்களிலே இருந்து கண்மூடிப் பழக்க வழக்கங்களை மாற்றக் கடுமையாகப் போராடினார்.

பொருள் விளங்காத பாடங்களை யந்திரம் போல் குழந்தைகள் கற்பதால், இயற்கையாக அவர்களுக்குள்ளே இருக்கும் தெளிவு, ஆற்றல் உணர்ச்சி போன்றவை மயங்குவதால் அதை