பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

57


மாற்றிடச் சிந்தனை செய்தார். குழந்தைகள் அவர்கள் ஆசை போல ஆட வேண்டும், பாட வேண்டும் என்ற உரிமைகளை அவர்களுக்கு மறுக்கக் கூடாது என்று முடிவு செய்தார்.

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் திட்டமிட்டு, குழந்தைகளை விளையாட விட்டு, வேண்டியவற்றை கற்கும்படி உரிமை கொடுக்க வேண்டும். அப்போதுதான், குழந்தைகள் அறிவு தட்டுத் தடங்கல் இல்லாமல் வளரும் சூழ்நிலை உருவாகும் என்று கருதினார்.

இசையாலும், நாடகத்தாலும், குழந்தைகளுக்கு கல்வி புகட்டவேண்டும். குழந்தைகளுக்கு இயற்கை நண்பனே தவிர விரோதி அல்ல என்பதை உணர்த்தி, இயற்கையோடு பழகிக் கற்கச் செய்ய வேண்டும். என்றெல்லாம், தாகூர் குழந்தைகளைப் பற்றி வெளிப்படையாகவே தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

கவிஞர் எளிமையும்; மனைவியின் மாண்பும்!

கவிஞர் தாகூர், தனது அருமை மனைவியோடு இல் வாழ்க்கையை பதினைந்து ஆண்டுகளே நடந்தினார். மனைவி மிருணாளினி கணவனுக்கு ஏற்ற இல்லத்தரசியாகவே வாழ்ந்து வந்தார். இனிமையான சொற்களோடு வருவார்போவார்களை இன்முகங்காட்டி உபசரிப்பார். உயர் பண்புகளுக்கான உறைவிடமாகத் திகழ்ந்தார்.

கணவர் கலையுள்ளச்சிந்தனைகளுக்கேற்ப அந்தக் கற்புக்கரசி மிருணாளினி திகழ்ந்தார். அந்த அம்மையார் குடும்பப் பொறுப்புக்களை ஏற்று, அத்தனை பெரிய மூத்தவர்கள் அனைவரிடமும், அவர்களது துணைவியார்களிடமும்,