பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


ஆண்டே கவிஞர் தனது அருமை மகள் ரேணுகா என்பவளை இருமல் நோய்க்குப் பலி கொடுத்து விட்டார். அவளுக்கு செலவு செய்த பணமும், முயற்சியும் வீணாகிவிட்டதே என்ற வருத்தம் கவிஞர் தாகூரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியது.

1904ஆம் ஆண்டில், சாந்தி நிகேதனை மிகப்பொறுப்புடன் நிர்வாகம் செய்துவந்த சதீஸ்சந்திர ராய் என்ற ஆசிரியர் காலமானதும் கவிஞருக்கு மேலும் கவலை ஏற்பட்டது.

சாந்தி நிகேதன் என்ற ஆசிரமத்தை முதன் முதல் உருவாக்கிய தேவேந்திரரநாத் தாகூர், ரவீந்திரரின் உயிருக்கும் உயிரான தந்தையார், 1905ஆம் ஆண்டில் மரணமுற்றார்.

கவிஞர் தாகூரின் இளைய மகனான சமீந்திர நாதன் என்பவர், தனது பதின்மூன்றாம் வயதிலே, 1907ஆம் ஆண்டில் உயிர்நீத்தார். அடுத்தடுத்து வந்த இவ்வளவு மரணத் துன்பங்களுக்கு இடையே கவிஞர் ஓயாமல் உழைத்துவரும் நிலையேற்பட்டு விட்டது. இந்த துன்பங்களுக்கு இடையே அவ்வப்போது எதிர்பாராமல் ஏற்பட்டு வந்த பொருளாதாரச் சிக்கலும் அவரை வருத்தியபடியே இருந்தது.

தாகூரின் நண்பர்களிலே சிலர் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இங்கிலாந்திலே இருந்து உற்பத்தியாகி வரும் பொருட்களை நாம் வாங்க கூடாது. இந்தியப் பொருளாதார லாபம் பிரிட்டிஷ் நாடுகளுக்குப் போகக் கூடாது என்று போராடினார்கள்.

சுதேசிக் கைத் தொழிலும் சுதேச வாணிகமும் மேலோங்கி வளர வேண்டும் என்ற ஆர்வத்தால், கவிஞர் தாகூர் கூட அக்கொள்கைகளின் உணர்ச்சிகளைப் போற்றி மதித்தார். அது