பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

69


மட்டுமன்று; இது காந்தீயக் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது என்பதனால் அவற்றுக்கு ஆதரவும் அளித்தார்.

கவிஞருடைய நண்பர்களும், உறவினர்களும் தொடங்கிய இந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குரிய அமைப்புகளில் கவிஞர் தாகூரும் பங்கு கொண்டு, தனது பணத்தை அதிலே பங்குகளாகச் செலுத்தினார். ஆனால் அவற்றுக்கு எப்படி அரசு ஆதரவு கிடைக்கும்? அதனால் அந்த தொழில் வளர்ச்சி பெறாமல் வீழ்ச்சியுற்றது. கவிஞர் ரவீந்திரர் போட்ட முதலும், பங்கும் நட்டத்தை விளைவித்தது. தாகூர் பெருங் கடன்காரரானார். அவரது பொருளாதார நிலைக்கு மேலும் பெருத்த அடி வீழ்ந்தது. தனது சொத்துக்களை எல்லாம் இழந்தார்!

அரசியல் பிரவேசம்

எப்போதெல்லாம் நாட்டு மக்களுக்குத் துன்பம் நேர்கின்றதோ, அப்போதெல்லாம் ரவீந்திரர் தனது நிலைகளைக் கூட ஆராயாமல் தேசத் தொண்டாற்றிட முன்வரிசையிலே நிற்பார்.

1889ஆம் ஆண்டு கல்கத்தா நகரிலே பிளேக் நோய் பரவியபோது, முதன் முதலாக ரவீந்திரர் மக்கள் தொண்டாற்றிடப் புறப்பட்டார். அந்த நேரத்தில் வங்க ஞானி ராமகிருஷ்ணர் மடத்திலே ஆன்மிகத் தொண்டாற்றிய நிவேதிதை என்ற அம்மையாருடன் சேர்ந்து, இரவும் பகலுமாக ஓய்வில்லாமல் நோய் தடுப்புப் பணிகளிலே ஈடுபட்டு சேவையாற்றினார். பணம் திரட்டி மக்களுக்குரிய வசதிகளைச் செய்து தந்தார்.