பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

73


ஒத்திகைகளை கவிஞர் ரவீந்திரரே முன்னின்று நடத்தினார் என்பது மட்டுமன்று, அவரே நாடகத்தில் நடித்தார். இந்த நாடக ஒத்திகைகளும், நாடகங்களும், அவரது நடிப்பும் ஏதோ பொழுது போக்கிற்காக நடத்தப்பட்டவை அல்ல! சாந்தி நிகேதன் வந்து பல்கலைகள் பயிலும் மாணவ மணிகளுக்குரிய இலக்கியமாக, நாடகத் துறைக்கு இலக்கணமாக, கல்வித் துறைக்குரிய பாடபோதனைகளாகவும் திகழ்ந்தன.

கவிஞர் தாகூர் பெருமானுக்கு 1911ஆம் ஆண்டில் ஐம்பதாவது பிறந்த நாள் விழா, சாந்திநிகேதனில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே நேரம் வங்காள மாநிலத்து அறிஞர்களால். கல்வியாளர்களால் பல இடங்களிலே அந்த புகழ் மகனுக்கு விழா எடுக்கப்பட்டது. யார் யார் அரசியல் பெயரால் கவிஞரை அவமதித்தார்களோ, பழித்துப் பேசினார்களோ, அவர்கள் அனைவரும் ‘தாகூர் பெருமானைப் போற்றித் திரு அகவல்கள் பாடினார்கள்!

1912-ஆம் ஆண்டில், கல்கத்தா நகர மண்டபத்தில் நடை பெற்ற கவிஞர் தாகூர் பாராட்டுவிழாக் கூட்டத்தில் வங்க இலக்கியக் கழகம் அவருக்கு விருது வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தது. பிரம்ம சமாஜ ஆண்டு விழாவில் கவிஞர் தாகூர் கலந்து கொண்டு, இந்திய நாட்டு வணக்கப் பாடலாக ‘ஜன கண மன’ என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் தான்.

இன்று இந்திய தேசிய கீதமாக ஒலிக்கிறது.

ஜன கணமன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப லிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா