பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


கோள்களுக்கு ஏற்ப, சொற்பொழிவுகளாற்றி அரிய கருத்துகளைக் கூறினார்.

நோபெல் பரிசு பெற்றார் தாகூர்

அமெரிக்காவிலே சொற்பொழிவாற்றி விட்டு மீண்டும் லண்டன் வந்தார் கவிஞர் தாகூர். பிறகு, நேராக 1913-நவம்பர் மாதத்தில் இந்தியா திரும்பினார். சாந்திநிகேதன் வந்து சேர்ந்த கவிஞர் தாகூருக்கு ஓர் அவசர தந்தி வந்தது. அதில், இரவீந்திர நாத் தாகூருக்கு இலக்கியத்துறை பிரிவு சார்பாக நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. சாந்திநிகேதனையே அந்தத் தந்தி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

இந்த நோபல் பரிசு அன்று வரை ஐரோப்பிய அறிஞர்களுக்கே தொடர்ந்து வழங்கி வரப்பட்டது. அந்த பரிசு வழங்கல் மரபை. ‘கீதாஞ்சலி’ உடைத்தெறிந்து விட்டது. ஐரோப்பியர்கள் அல்லாத இந்தியரான ரவீந்திரநாத் தாகூருக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது.

நோபல் பரிசு பெற்றுவிட்ட ரவீந்திர நாத் தாகூரை வங்க அறிஞர்கள் முன்பைவிட இப்போது மிக மரியாதை கொடுத்துப் பாராட்டினார்கள். வங்காளத்திலே யார் யார் அவரை அவமரியாதையாக அன்று பேசினார்களோ, கேலியும் கிண்டலும் செய்து மிகவும் கேவலமாக நடந்து கெண்டார்களோ, அவர்களனை வரும். இப்போது பாராட்ட வந்த அறிஞர்களோடு சேர்ந்து கொண்டார்கள்.

கல்கத்தா நகரில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டில் வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜியும், கவிஞர் தாகூரும் சந்தித்துக் கொண்ட நேரத்தில், சட்டர்ஜி தாகூரை புகழ்ந்து