உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

89


மக்களுக்குச் சூழும் போதெல்லாம், அக்கிராமத்து தொண்டர் படை ஓடிவந்து உதவும் மனப்பாங்கை அவர் உருவாக்கினார். மாணவர்களும், பயனுள்ள துறைகளில் பழகிவந்தார்கள். அதனால், அவர்களது உடலும் தூய்மையானது; உள்ளமும் தூய்மை பெற்றது.

மரம், செடி, கொடி, தோட்டம் ஆகியவற்றை மாணவர் படையினர் வளர்த்தார்கள் பயிரிட்டார்கள் தோட்டத்தின் காய்கறிகளை தமக்கும், ஊராருக்கும் வழங்கி நன்மை பெற்று, நல்ல பெயரடைந்தார்கள்.

கிராம மக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும், அதாவது ஒவ்வொரு தொண்டர் வீட்டிலும் ஒவ்வொரு காய்கறித் தோட்டம் இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாயிற்று. பொதுத் தோட்டத்து விளைச்சலைச் சந்தையில் விற்றுப் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்களை வாங்கினார்கள். மருத்துவர்களிடமிருந்து மருந்துகளை வாங்கிக் கொண்டு போய் நோயாளிகளுக்குக் கொடுப்பதும், வேறு சில வேலைகளை கிராம முன்னேற்றத்துக்காகச் செய்வதும் தொண்டர் படையினர் பணிகளாகும். இவை மட்டு மல்லாமல், பொழுது போக்குகளுக்கும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொண்டர் படையினதும். கிராம மக்கயினதும் மகிழ்ச்சிகளுக்காக, விளையாட்டுக்கள், நாடகங்கள், கதைகள், பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன.

தேர்வு முறையற்ற கல்வி

மேற்கண்டவாறு ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெற்றதால், அவற்றிலே தேர்வும், பண்படும் மனமும் அமைந்த