அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், கவிஞர் தாகூரின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. நூல்கள் பரபரப்பாக விற்பனையாவதை அறிந்து இங்கிலாந்து பதிப்பகம் ஒன்று அவரது மற்ற நூல்களையும் அச்சிட்டன. தாகூர் பாடல்கள் மட்டுமல்ல, அவரது சிறுகதைகள். நாவல்கள், கட்டுரைகள். நாடகங்கள், சொற்பொழிவுகள் எல்லாம் நூல்களாக்கப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருந்தன. இந்த நூல்களை மற்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தாகூரின் உரிமையுடன் வெளியிட்டு, விற்பனையைப் பெருக்கின.
இந்தியாவிலே இருக்கின்ற விசுவபாரதி, உலகக்கலைக்கழக நிகழ்ச்சிகளை, உலகம் முழுவதும் அறிந்திட, கவிஞர் “விசுவபாரதி” என்ற மாதப் பத்திரிகையை வெளியிட்டார். அதற்கு தாகூரே ஆசிரியர். அந்தப் பத்திரிகையில் கவிஞர் மாதந்தோறும் தவறாமல் எழுதிவருவார்.
தாகூரின் சிறுகதைகள், சுவை மிகுந்த இலக்கியங்கள்! அவருடைய பாடல்களில் நவரசங்களும் இருக்கும். ஒவ்வொரு கதையும், நாவலும், நாடகங்களும் ஒவ்வொரு சுவையை விளக்குபவையாகவும், நகைச்சுவையாகவும்,