பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஊர்வ சர்வா 净 峨 கவியின் கனவு காட்சி இவை போதும் இந்த அப்பாவிகளுக்கு: கற்பனைக் கடலின் கரை காணுவதாக எண்ணிக் கனவின் ஆழத்திற்கே போய்விடுவார்கள். ஆனால், இந்தக் கலைஞர்கள் நம் வலையில் விழும் கலைமான்களாகத் தெரியவில்லை, சுவாமி அந்தப் பேய்களின் தொல்லையைப் போக்கப் புது முறை கண்டு பிடித்திருப்பதாகச் சொன்னிர்களே. ஆமாம். உங்கள் சர்வாதிகாரியின் செயல் யாவுமே புதிதாகத்தான் இருக்கும். அறிவு நூல் பல கற்றேன். அறிவின் கரை கண்டுவிட்டேன். ஞானம், விஞ்ஞானம் எல்லாம் கலந்த மெய்ஞ்ஞானச் சங்கமாகி விட்டேன். இனி இதுவே நான் காட்டும் புதிய நெறி. இந்த நெறியில் மனித நரிகள் அச்சமின்றி நடமாடலாம். அச்சத்தை நீக்குவேன். ஆட்சியை ஆக்குவேன். அபயம் தந்தேன். அஞ்சற்க, மன்னா! நானிருக்கப் பயமேன்! நானே கடவுள்: (காசி 10 முடிவு)