எஸ்.டி. சுந்தரம் 105
மணி
சுகதே
மணி
சுகதே
மணி
சுகதே
மணி
உம். என்ன செய்வது! மலைக்காட்டில் பிடித்த பெருநெருப்பு, கனி மரங்களென்றும், காய்ந்த மரங்களென்றும் வேற்றுமை பார்ப்பதில்லை. அதே போலத்தான் மரணமும் ஒரு பொறுப்பற்ற நாசக்கருவி. நல்லவர், தீயவர் என்று பாராமல் எல்லோரையும் கொள்ளை கொண்டு போய் விடுகிறது.
இவரது தம்பி வீரசிம்மர்தான் தற்போது வேந்தர் பதவியிலிருப்பது. எனினும், மக்களின் மனத்தில் நிலைத்திருப்பது இவரது அன்புருவந்தான். அருள் தங்கிய வேந்தர்.
வருந்திப் பயனென்ன? 'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும். பிறப்பு’ அறியாமை இல்லாவிட்டால் நாட்டு மக்கள் எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள்தாம். உழைப்பும் உறுதியும் பெருகினால் இந்த உலகி லேயே நம்நாடு உயர்பெற்று விளங்கும். பொய் மைக்குப் பணியாத வாய்மையும், புரட்டுக்கு அஞ்சாத ஆண்மையும் இருந்தால் இந்நாட்டு மக்கள் இணையற்ற வீரர்களாவார்கள்.
நண்பரே! தங்களுக்கு அரசியல் ஞானமும் நன்கமைந்துள்ளது.
மன்னியுங்கள். உணர்ச்சியில் ஏதேனும் உளறி யிருப்பேன். உண்மையிற் கூறுகிறேன். வெறும் புகழ்ச்சியல்ல; தங்களது முதிர்ந்த அறிவின் எழுச்சியைத் தங்கள் நாடகங்களிலே காணுகின்றேன். நாடகத்தின் பெருமைக்கு நான் மட்டும் காரண மல்ல. அதை எழுதிய அமர கவிஞக்கும், உடன் ஒத்துழைக்கும் ஏழைச் சோதரர்களுக்குமேதான் முழுப்பெருமையும்.
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/107
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
