பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கவியின் கனவு சுகதே மணி சுகதே மணி சுகதே சுகதே சேவகன் மலே காலமாகி விட்டார். பெற்ற தாய் தந்தையும் இல்லை, உற்ற தாய் தந்தையும் இல்லை. உலகமே எம் தாய் தந்தை, என்ன செய்வது? நாங்கள் அனாதைகள் அய்யா. (கண் கலங்குதல்/ நண்பரே! மன்னிக்க வேண்டும் வேண்டாத கேள்விகளைக் கேட்டுவிட்டேன். உங்கள் உள்ளத் தில் மறைந்திருந்த துயர உணர்ச்சியைத் துண்டி விட்ட குற்றத்தைச் செய்து விட்டேன். இதைப் பற்றி நான் கேட்டிருக்கவே கூடாது. இனி நீங்கள் அனாதைகள் அல்ல. நாட்டின் கலைஞர்கள் - சேனாதிபதி சுகதேவனின் நண்பர்கள். ஆமாம், அன்று நாடகம் முடிவதற்குள் அரசியும் அரசரும் ஏன் அண்ணா எழுந்து போய் விட்டார்கள்? ஏதேனும் அவசர அலுவல் இருந்திருக்கலாம். மேலும், அவர் இருந்து நாடக முழுவதையும் பார்த்திருந்தால்கூட அதில் போரைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் விளக்கியிருந்த பகுதிகள் அவருக்குப் பிடித்திருக்காது. - ஏன், வேந்தர்க்கும் வீரத்திற்கும் வெகு தூரமோ? அவர் நல்லவர்தான். அவரது நல்வாழ்வுக்கு இடை யூறு செய்ய சர்வாதிகாரி ஒருவர் இருக்கிறார். வேந்தர் முன்னேற்றத்திற்கு அவர் ஒரு பெரும் முட்டுக்கட்டை, முரட்டு ஜென்மம். அநியாய சூரன், அறிவிலே பெரியவன். ஆனால், அவ்வள வும் விஷம். இதயமற்றவன், (ஒரு சேவகன் நுழைந்து வணங்குதல்) என்ன?

கலைஞர் மணிவண்ணரை, அரச அவைக்கு

அழைத்து வரும்படி வேந்தர் ஆணை அனுப்பி யுள்ளார்.